சீரற்ற வானிலையால் தொடரும் மண்சரிவு!

Date:

மலையகத்துக்கான ரயில் பாதையில் ஹாலிஎல – உடுவர பிரதேசத்திற்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று (22) நள்ளிரவு இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையக ரயில் பாதையில் பதுளை வரை இயங்கும் ரயில் சேவைகள் மறு அறிவித்தல் வரை நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாறைகள் சரிந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய வானிலையுடன் மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதி பலாங்கொடை சமனலவெவ ஹல்பே பிரதேசத்தில் தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் மண்சரிவு காரணமாக கொழும்பு பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை, இம்புல்பே, சீலகம ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...