இதில் ஷகிப் அல் ஹசன் ஆளுங்கட்சியான அவாமி லீக்கின் சார்பில் மகுரா-1 தொகுதியில் போட்டியிடுகிறார். இது ஷகிப்பின் சொந்தத் தொகுதியாகும்.
இதனால் அந்தப் போட்டியில் இருந்து ஷகிப் விலகினார். தற்போது காயத்திற்கு சிகிச்சை பெற்றுவரும் அவர் மீண்டும் எப்போது விளையாட வருவார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்டுகளைக் கொண்ட தொடரில் வங்கதேசம் விளையாடவுள்ளது. நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடருக்குப் பிறகு பங்காளதேஷ் அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. தேர்தலில் போட்டியிடுவதால் நியூசிலாந்துக்கு ஷகிப் செல்வாரா என்பது இன்னும் தெரியவில்லை.
அடுத்த ஆண்டு ஜூனில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளதால் ஷகிப்பின் தேர்தல் பிரவேசம், பங்காளதேஷ் கிரிக்கெட் அணியைப் பாதிக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
அவர் மட்டுமல்லாமல் கிரிக்கெட் சபை இயக்குநர் சஃபியுல் செளத்ரியும் இத்தேர்தலில் போட்டியிடவுள்ளார். பொதுவாழ்க்கையில் ஈடுபடாத ஷகிப் அல் ஹசன், அரசியல் பயணத்தில் என்ன செய்யப் போகிறார் என்பது தான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.