பாடசாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு, மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை மட்டத்தில் ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வெல்லம்பிட்டி – வெஹரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பாடசாலைகளில் உள்ள ஆபத்தான கட்டடங்கள் மற்றும் இடங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.