புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 15 குடும்பங்களைச் சேர்ந்த 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாராக்குடிவில்லு கிராம சேவகர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேரும், அங்குனவில கிராம சேவகர் பிரிவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஆனமடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சங்கட்டிக்குளம் கிராமத்தில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை முந்தல் மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேச செயலகங்கள் முன்னெடுத்து வருகின்றன.