‘மக்களுக்கும் நாட்டுக்கும் அபகீர்த்தி’: மக்கள் காங்கிரஸிலிருந்து அலிசப்ரி ரஹீம் எம்.பி நீக்கம்

Date:

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தவிசாளர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

“பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் மீது கட்சியின் ஒழுக்காற்றுக் குழு நடத்திய தொடர்ச்சியான விசாரணையின் பின்னரே, கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவரை நீக்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் பிரதிநிதியான அலிசப்ரி ரஹீம் சட்டவிரோதமாக தங்கத்தைக் கடத்திய சம்பவம், கட்சிக்கும் சமூகத்துக்கும் அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கும் மற்றும் நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே, இவரின் உறுப்புரிமையை நீக்குவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

இது தொடர்பில், விசாரணை நடத்திய ஒழுக்காற்றுக் குழுவின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடம் இந்த முடிவை எடுத்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் முஸ்லிம் தேசிய கூட்டமைப்புக்கும் (MNA) இடையில் ஏற்படுத்தப்பட்ட தேர்தல் உடன்படிக்கையின் பிரகாரம், தராசுச் சின்னத்தில் அலிசப்ரி ரஹீம் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிணங்க, இவரது பதவி விலக்கல் குறித்த கடிதம் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நயீமுல்லாவுக்கும், அலிசப்ரி ரஹீமுக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...