ரொஷான் ரணசிங்க விளையாட்டு மற்றும் நீர்ப்பாசன அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமைக்கான காரணத்தை பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர்,
அமைச்சரவை ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும் என்றும், அந்த ஒழுக்கத்தை பின்பற்றுவது அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினரின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கொள்கையை கடைப்பிடிக்க விரும்பாதவர்கள் வெளியேறலாம், அல்லது அவர்கள் நீக்கப்படுவார்கள் அல்லது பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
“நல்லாட்சி அரசாங்கத்தின் போது, ஒரு சட்டமூலத்தை முன்மொழிந்த பாராளுமன்ற உறுப்பினர் இறுதியில் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தார். இது கடந்த காலத்தில் நடந்ததால், அதையே செய்யலாம் என நினைக்கும் சிலர் இங்கு உள்ளனர். அத்தகைய நடவடிக்கைகள் இப்போது நடைபெறாது” என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.