வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

Date:

வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட முன்மொழிவு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 14ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரவு – செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் 7 ஆவது நாளான இன்று மாலை 6.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வரவு – செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (22) முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...