ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தியது ஐசிசி!

Date:

ஐ.சி.சி. எனும் சர்வதேச கிரிக்கெட் சபை  இலங்கை கிரிக்கெட்டை ( SLC) தற்காலிகமாக தடை செய்துள்ளது.

இன்று கூடிய சர்வதேச கிரிக்கெட் பேரவை இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அதன் கடமைகளை கடுமையாக மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மேலும் இலங்கை கிரிக்கெட்டில்  அரசாங்கத்தின் தலையீடு  அதிகமாக இருப்பதாக நம்புவதால்  இவ்வாறு இலங்கை கிரிக்கெட் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்ற‌து.

இலங்கை, சர்வதேச கிரிக்கெட் பேரவையின்  அங்கத்துவ நாடு என்ற‌ ரீதியில் இலங்கை கிரிக்கெட் எதிர்க்கொண்டுள்ள நிலைமை மற்றும் அதன் கடமைகள், நிர்வாகம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இதன்போதே இலங்கை கிரிக்கெட்டை தற்காலிகமாக தடை செய்வது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்காலிக தடையின் நிபந்தனைகள் என்ன என்பது தொடர்பில் உடனடியாக அறிய முடியாத நிலையில், நிபந்தனைகள் தொடர்பில்  மிக விரைவில் அறிவிக்கப்ப‌டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...