இன்றைய வானிலை அறிவிப்பு: வங்காள விரிகுடாவில் புயல்

Date:

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று (02) இரவு வரை  வட அகலாங்கு 11.2° மற்றும்  கிழக்கு நெடுங்கோடு 82.7°க்கு அருகாமையில்  யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 330 கிலோ மீற்றர் தொலைவில் வடகிழக்கே நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள நாட்டிலிருந்து நகர்கிறது.

இது நாளை (04) ஆகும் போது இந்தியாவின் வட தமிழக கடற்கரை வரையை நகர்ந்து, பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை (05) தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்கும் என்று  வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

Popular

More like this
Related

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...