காசா மீதான போரை நிறுத்தக் கோரி லண்டனில் மீண்டும் போராட்டம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்!

Date:

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை உடனடியாக நிறுத்தக் கோரியும், முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் போர்நிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கத் தவறியதற்காக தங்கள் அரசாங்கத்தை விமர்சித்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள்  லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போர் நிறுத்தம், இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைத்தல் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு நேற்று (09)  ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.

காசாவில் உடனடியாக போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தில் இருந்து லண்டன் விலகியதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள்  விமர்சித்தனர்.

காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் (யு.என்.எஸ்.சி) தீர்மானத்தில் இருந்து லண்டன்  புறக்கணித்ததால் மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது.

காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 17,700 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

பாலஸ்தீன ஒற்றுமை இயக்கம், போரை நிறுத்துவதற்கான கூட்டணி மற்றும் அல் அக்ஸாவின் நண்பர்கள் ஆகிய குழுக்கள் லண்டன் பேரணியில் பங்கேற்றன,  இதில் 100,000 பேர் வரை பங்கேற்றனர்.

 

Popular

More like this
Related

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...