காசா மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது!

Date:

ஒரு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் நிறைவடைந்ததை அடுத்து, காசா மீது இஸ்ரேல் தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தியுள்ளது.

பேச்சுவார்த்தைகள் மூலம் போரினை இடைநிறுத்தம் செய்வதற்காக கத்தார் முயற்சித்து வருகிறது.

முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் பாலஸ்தீனியர்கள் “நோய், அழிவு மற்றும் இறப்பு ஆகியவற்றால் சிக்கிக் கொண்டுள்ளனர்” என்று கூறி, ஐ.நா தலைவர் மீண்டும் காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

போர் நிறுத்தத்தின் பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 178 பேர் பலியாகியுள்ளதாகவும், 589 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

200 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அக்டோபர் 7 முதல், காஸாவில் 15,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் இறப்பு எண்ணிக்கை சுமார் 1,200 ஆகும்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...