கொழும்பு துறைமுகத்தில் முக்கிய மூன்று பயணக் கப்பல்கள்!

Date:

வாஸ்கோடகாமா, மெய்ன் ஷிஃப் 5, மற்றும் MS செவன் சீஸ் நேவிகேட்டர் ஆகிய மூன்று பயணக் கப்பல்கள் ஒரே நாளில் கிட்டத்தட்ட 4,000 பயணிகளுடன் கொழும்பிற்கு வந்துள்ளது.

சர் ரிச்சர்ட் பிரான்சனின் புகழ்பெற்ற குழுவின் ஒரு பகுதியான விர்ஜின் வோயேஜஸ் நிறுவனத்தில் இருந்து ‘ரெசிலியன்ட் லேடி’ கடந்த மாதம் இந்த கப்பல் சீசனை தொடங்கியது.

ஆரம்பத்தில் வந்த மாரெல்லா டிஸ்கவரி 2இன் வருகை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருக்கும் குறித்த கப்பல் பயணிகளை இறக்குவதற்காக கொழும்புக்கு மூன்று விமானங்களை கொண்டு வந்தது.

வாஸ்கோடகாமா கப்பலானது முதல்முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

அதன் பயணிகள் திருகோணமலை துறைமுகத்திற்கு தங்கள் பயணத்தைத் தொடரவுள்ளதாகவும் அதற்கு முன் கொழும்பின் துடிப்பான இடங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மின்னேரியா, தம்புள்ளை, சீகிரியா, பொலன்னறுவை, கிழக்குக் கடற்கரையின் மயக்கும் காட்சிகள் போன்றவற்றை சுற்றலா பயணிகள் ஆராய்வார்கள்.
ஒரே நேரத்தில் மூன்று பயணக் கப்பல்களை ஏற்பாடு செய்யும் தடையற்ற செயற்பாடு, பெரிய குழுக்களின் பல்வேறு விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் Aitken Spence Travels இன் விதிவிலக்கான திறனுக்கு ஒரு சான்றாகும்.

இவர்கள் இலங்கையில் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தங்கியிருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...