லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இம்மாதம் திருத்தப்படமாட்டாது என அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளாா்.
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்திருந்தாலும், எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு எரிவாயு விலையை அதிகரிக்கப்போவதில்லை என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளாா்.
அதற்கமைய, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 3,565 ரூபாவுக்கும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 1,431 ரூபாவுக்கும், 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் 668 ரூபாவுக்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும்.