சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று: ‘தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகள் மிகவும் பாதிப்படைந்துள்ளன’

Date:

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்.

1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய வருடந்தோரும் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் நினைவுகூரப்படுகின்றது.

சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்த வருடத்துடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இந்தநிலையில் எதிர்காலத்தில் மனித உரிமைகளையும் கலாசாரத்தையும் ஒருங்கிணைத்தல் மற்றும் நிலைநிறுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் நினைவுகூறப்படுகின்றது.

அனைத்து பிரஜைகளுக்கும் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துவதே இந்த பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் அனைவரும் சுதந்திரமானவர்கள் மற்றும் சமத்துவமானவர்கள் என்பதை இந்த பிரகடனம் வலியுறுத்துகின்றது.

1955 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பிரகடனத்தை இலங்கை ஏற்றுக்கொண்டது.

அரசியல் பொருளாதாரம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்து விடயங்களிலும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது அனைத்து நாடுகளினதும் பொறுப்பு என 1993 ஆம் ஆண்டு இடம்பெற்ற மனித உரிமை மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கை வாழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மனித உரிமைகள் தினத்தில் விடுத்துள்ள செய்தியில் உறுதியளித்துள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகள் மிகவும் பாதிப்படைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது உலக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...