துருக்கியில் ஒரு தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளர் தனது மேசையில் ‘ஸ்டார்பக்ஸ்’ நிறுவனத்தின் கோப்பையுடன் கேமராவில் தோன்றியதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விருது பெற்ற 45 வயதான செய்தி ஒளிபரப்பாளர் மெல்டெம் குனே தடைசெய்யப்பட்ட பொருளைக் காட்டியதற்காக நிகழ்ச்சியின் இயக்குனருடன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
கிறிஸ்மஸ் தினத்தன்று குனே செய்தியைப் வாசிக்கும்போது ஸ்டார்பக்ஸிலிருந்து ஒரு கோப்பி கோப்பையை காட்டியுள்ளார். இதனையடுத்த இவர்கள் உடனடியாக பதவி நீக்கப்பட்டதுடன்
துருக்கி முக்கியமாக காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இருக்கும் முஸ்லிம் நாடு ஆகும்இ அங்கு ஸ்டார்பக்ஸ் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருதப்படுகிறது.
இதேவேளை பதவி நீக்கப்பட்ட இவர்கள் ஸ்டார்பக்ஸ் கோப்பியை ‘மறைமுகமாக விளம்பரம்’ செய்ததாகக் கருதப்பட்ட பின்னர் ‘நியாயமான காரணத்திற்காக’ நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துருக்கியில் உள்ள கோப்பி பிரியர்கள் மற்றும் பலஸ்தீனிய ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு சார்பானதாகக் குற்றம் சாட்டி, கடந்த சில நாட்களாக நாடு தழுவிய புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த தொலைக்காட்சி நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
‘எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளுக்கு இணங்க எமது செய்தி தொலைக்காட்சியில் எந்தவொரு நிறுவனத்தையும் மறைமுகமாக விளம்பரம் செய்யும் வகையில் அறிவிப்பாளர் காட்டுவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
‘இந்தக் கொள்கைக்கு மாறாகச் செயல்பட்ட செய்தி தொகுப்பாளர் மற்றும் இயக்குநர் நியாயமான காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
‘எங்கள் நிறுவனம் காஸா தொடர்பான துருக்கிய மக்களின் உணர்வுகளை அறிந்து இறுதிவரை அவர்களைப் பாதுகாத்து வரும் புரிதலைக் கொண்டுள்ளது. இதற்கு முரணான எந்தவொரு செயலையும் அங்கீகரிப்பது முற்றிலும் சாத்தியமற்றது.
‘வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்ட தொகுப்பாளர் மற்றும் இயக்குனரின் இந்த செயலை நாங்கள் ஏற்கவில்லை நாங்கள் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
‘இந்த காரணத்திற்காக, அவர்களின் வேலை ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்டன. ‘இனிமேல், எங்கள் நிறுவனம் காசா மற்றும் துருக்கிய மக்களுக்கு ஆதரவாக நிற்கும் மற்றும் இறுதி வரை அவர்களின் உணர்வுகளைப் பாதுகாக்கும் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.