ஜெரோம் பெர்னாண்டோவுக்கு 13ஆம் திகதி வரை விளக்கமறியல்

Date:

சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 29ஆம் திகதி நாடு திரும்பிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நேற்று (30) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

அதன்போது, ​​அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 8 மணி நேர வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தனர்.

இருந்தபோதிலும் மீண்டும் அவரை இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டது.

அதன்படி வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...