தனது குரலைப்போல் பதிவு செய்து மக்களை ஏமாற்றியவருக்கு எதிராக 100 மில்லியன் நஷ்ட ஈடுகோரி வழக்கு பதிவுசெய்யப் போவதாக டாக்டர் ரயீஸ் முஸ்தபா அறிவிப்பு!

Date:

மத்ரஸா கல்வி முறையையும் அங்கு கல்வி பயின்று வெளியேறுகின்ற மௌலவிமார்களையும் தவறாக சித்தரிக்கும் வகையில் தமது குரல் பதிவுப்போன்ற ஒரு குரலை பதிவேற்றி சமூக ஊடகங்களில் பரப்பி விட்டவருக்கு எதிராக ரூ. 100 மில்லியன் கோரி மான நஷ்டஈடு வழக்கு தொடரவுள்ளதாக பிரபல குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் ‘நியூஸ்நவ்’ க்கு கூறுகையில்,

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் தனது குரல் பதிவைப்போன்று ஒரு குரலில் இந்த தவறான செய்திகள் பரவிவரும் செய்தி தனக்கு கிடைத்ததாகவும் பின்னர் இதுபற்றி தான் சமூக ஊடகங்களில் மறுப்பையும் தெரிவித்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த செயலை செய்த நபரை தற்போது அறிந்திருப்பதாகவும் அவருக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு தொடரவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், இந்த வழக்கு மூலம் கிடைக்கப்பெறும் நஷ்ட ஈட்டுத் தொகையை குர்ஆன் தப்ஷீர் ஆய்வு நிலையமொன்றை உருவாக்குவதற்காக இலங்கையில் முன்னணி அரபுக்கல்லூரி ஒன்றிற்கு இந்தத் தொகையை அர்ப்பணிக்கவிருப்பதாகவும் அதில் ஒரு சதமேனும் தான் பெற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் பெறப்படுகின்ற அனைத்து வருமானங்களையும் சமூகத்திற்காக  அர்ப்பணிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இதுபோன்று சமூகத்தை குழப்பியடிக்கின்ற வேலையில் ஈடுபடுவர்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மரணத்தை தொடர்ந்து இலங்கையிலுள்ள அரபுக்கல்லூரிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் கருத்தாடல்களும் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில் பிரபல குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர் டாக்க்டர் ரயீரஸ் முஸ்தபா அவர்கள் மத்ரஸாக்கள் அல்லது மத்ரஸாக்களுடன் தொடர்கொண்ட ஆலிம்கள் தொடர்பில் சொன்னதாக சமூக ஊடகங்களில் பரலாக செய்திகள் பகிரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...