தெல்தோட்டை எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பவள விழாவினை முன்னிட்டு சிறப்பு கௌரவிப்பு நிகழ்வு!

Date:

கண்டி, தெல்தோட்டை எனசல்கொல்ல மத்திய கல்லூரி ‘ஒன்றிணைவோம் – பலம்பெறுவோம்’ எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ம் மற்றும் 17ம் திகதிகளில் தனது 75 வருட பூர்த்தி பவள விழாவினை கொண்டாடுகின்றது.

மூன்று கட்டங்களாக இந்த விழாவினை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை உறுப்பினர்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இந்த விழாவில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் டிசம்பர் மாதம் 17ம் திகதி கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் கல்லூரியில் கடமைக்காத்த முன்னாள் அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகள், தெல்தோட்டை பகுதி மூத்த உலமாக்கள் மற்றும் மூத்த பழைய மாணவர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர்.

கல்லூரியின் முதல்வர் அல்ஹாஜ் எம்.ஜி. நயிமுல்லாஹ் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரபல தொழிலதிபர் கலாநிதி அல்ஹாஜ் எம்.ஸீ. பஹார்தீன் ஜே.பி. கலந்து சிறப்பிக்க உள்ளார்.

நிகழ்வின் கௌரவ அதிதிகளாக கொழும்பு, இப்ராஹிம் குழுமு நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர் அல்ஹாஜ் அல்ஹாஜ் அர்ஷாத் பாரூக் மற்றும் கண்டி பாரூக் பிரதர்ஸ் உரிமையாளர், பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் ஜே.எம். பாரூக் ஜே.பி. ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

சிறப்பு அதிதியாக கவிஞர், எழுத்தாளர், படித்ததும் பகர்வதும் புகழ் தினகரன் சிரேஷ்ட சட்டத்தரணி கலாபூஷணம் அல்ஹாஜ் ரசீத் எம். இம்தியாஸ் கலந்து கொள்ளவுள்ள உள்ளதுடன், விசேட அதிதியாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரி ஏ.எம். மொஹமட் சாலிஹீன் கலந்து கொள்ள உள்ளார்.

இவர்களை பிரமாண்டமான முறையில் வரவேற்பதற்கான ஏற்பாடுகள் கல்லூரியில் இடம்பெற்று வருகின்றன.

கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் பவள விழா நினைவு மலரும் வெளியிடப்படவுள்ளதுடன் பல்வேறு சிறப்பு கலை நிகழச்சிகளும் இடம்பெறவுள்ளதாக பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் செயலாளர் கொழும்பு மாவட்ட முஸ்லிம் விவாகப்பதிவாளர் அல்ஹாஜ் நாகூர் ரஹீம் ஜே.பி. தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...