தேசிய ‘முவே தாய்’ சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டி 2023: ‘IMA Sri Lanka’ கழகத்துக்கு அதிக பதக்கங்கள்!!

Date:

நான்காவது தேசிய மட்ட ‘முவே தாய்’ சாம்பியன்ஷிப்- (Muay Thai National Championship 2023) போட்டிகள் இவ்வருடம் நவம்பர் 30ம் திகதி தொடக்கம் டிசம்பர் 3ஆம் திகதி திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இலங்கை முவே தாய் சம்மேளனத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இப்போட்டியில் இலங்கையின் பலம் வாய்ந்த முன்னணி முவே தாய் கழகங்களான, இலங்கை தரைப்படை, இலங்கை கடற்படை மற்றும் ஐ.எம். ஏ (IMA Sri Lanka) உட்பட 29 கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 600இற்கும் அதிகமான முவே தாய் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டித்தொடரின் பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 3ம் திகதி சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க  கலந்து கொண்டனர்.
இதன்போது 12 சிறந்த வீரர்களுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவற்றுள் 06 விருதுகளை இலங்கையின் பலம்வாய்ந்த முன்னணி முவே தாய் கழகமான ‘IMA Sri Lanka’ கழகம் சுவீகரித்தம்மை சிறப்பம்சமாகும்.

இக்கழகத்தின் வீரர்களை இலங்கையில் முன்னணி மற்றும் முவே தாய் தொடர்பான அதிக அனுபவத்தை கொண்ட M.H.M FAHID அவர்கள் பயிற்றுவித்து வருகிறார்.

இப்போட்டித்தொடரில் 12, 14, 16, 18, 23 கீழ் மற்றும் 40 வயதெல்லைகளுக்குரிய முவே  தாய் வீரர்கள் கலந்துகொண்டனர்.

119 வீரர்கள் ஐ.எம். ஏ (IMA Sri Lanka) ஐ பிரதிநிதித்துவப்படுத்தி அதிக பதக்கங்களை வென்றெடுத்தனர். பதக்க விபரம் : தங்கம் (45) , வெள்ளி (22), வெண்கலம் (36)

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...