நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ. சி. மொஹமட் நஃபீல்: ஜனாதிபதி வழங்கியுள்ள 10 புதிய நியமனங்கள்!

Date:

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ. சி. மொஹமட் நஃபீல், நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சின் செயலாளராக பி. பி.யசரத்ன, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக சமன் தர்ஷன பாடிகோராள ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களையும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களையும்  நியமித்துள்ளார்.

இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ. சி. மொஹமட் நஃபீல், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சின் செயலாளராக பி. பி.யசரத்ன, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக சமன் தர்ஷன பாடிகோராள ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பி. கே. பி. சந்திரகீர்த்தி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளராக கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக கலாநிதி தர்மசிறி குமாரதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வடமத்திய மாகாணத்தின் பிரதம செயலாளராக ஆர்.எம்.டபிள்யூ.எஸ். சமரதிவாகர மற்றும் மேல் மாகாண பிரதம செயலாளராக எஸ்.எல்.டி.கே. விஜயசிங்க ஆகியோரை ரணில் விக்ரமசிங்க, நியமித்துள்ளார்.

Popular

More like this
Related

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...

இலங்கையின் மூன்றாவது நெனோ செயற்கைக்கோள் விண்வெளிக்கு!

உள்ளூர் பொறியாளர்களின் தொழில்நுட்ப பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மூன்றாவது நெனோ செயற்கைக்கோளை இன்று...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மாகாணங்களிலும்...