பிற்போடப்பட்ட ஜாமிஆ நளீமிய்யா பிரவேசப் பரீட்சை டிசம்பர் 9ஆம் 10ம் திகதிகளில்!

Date:

2023/2024ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம் ஆண்) தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப்பரீட்சைகள் 2023/12/09 மற்றும் 10 ஆந் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறும்.

09/12/2023 திகதி சனிக்கிழமை வடக்கு, வட மத்திய, வட மேல், தென் மற்றும் மேல் மாகாணங்களுக்கான நேர்முக மற்றும் எழுத்துப்பரீட்சைகள் இடம்பெற உள்ளன.

10/12/2023 திகதி ஞாயிற்றுக்கிழமை கிழக்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களுக்கான நேர்முக மற்றும் எழுத்துப்பரீட்சைகள் இடம்பெற உள்ளன.

ஏக காலத்தில் மாணவர்கள் பின்வரும் பாட நெறிகளில் பயிற்றுவிக்கப்படுவர்:

முதல் மூன்று வருடங்கள்

1. அடிப்படை இஸ்லாமியக் கற்கைகள்
2. அறபு மொழி
3. க.பொ.த உயர் தரம் (கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகள்)

க.பொ.த உயர் தரத்திற்கு பின்னரான நான்கு வருடங்கள்

1 இஸ்லாமியக் கற்கைகளில் சிறப்புத் தேர்ச்சி
2. பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பு

பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகள்

1. க.பொ.த. ( சா.த) பரீட்சையில் இஸ்லாம், தமிழ், கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல். அவற்றில் மூன்று பாடங்களில் திறமைச் சித்திகளைப் (C) பெற்றிருத்தல். வர்த்தகப் பிரிவில் இணைவதற்கு மேற்குறிப்பிட்ட தகைமைகளுடன் கணிதம் அல்லது வரலாறு அல்லது வர்த்தகப் பாடத்தில் திறமைச் சித்தியைப் பெற்றிருத்தல்.
2. 2006.01.31 ஆம் திகதிக்கு பின்னர் பிறந்தவராக இருத்தல்.
3. தேக ஆரோக்கியமும், நற்பண்புகளும் உடையவராக இருத்தல்.

பரீட்சாத்திகள் எடுத்து வரவேண்டிய ஆவணங்கள்

1. பிறப்புச் சாட்சிப் பத்திரம்
2 க.பொ.த. (சா.த) பரீட்சை பெறுபேற்று அட்டை
3. ஆள் அடையாள அட்டை
4. மஸ்ஜிதினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்
5. பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்
6. புலமைச் சான்றிதழ்கள்

பரீட்சாத்திகளின் கவனத்திற்கு

* நேர்முகப் பரீட்சை காலை 08.00 மணிக்கு ஆரம்பமாகும்.
* எழுத்துப்பரீட்சை நன்பகல் 12.00 மணிக்கு இடம்பெறும்.
* விண்ணப்பப் படிவங்கள் நேர்முகப் பரீட்சை நடைபெறும் தினத்தில் ஜாமிஆ வாயிற்காவல் பகுதியில் விநியோகிக்கப்படும்.
* கல்வி, விடுதி வசதிகள் இலவசம்
* மாதாந்த உணவுக்கட்டணம் 14000 ரூபாய்
* சேர்வுக் கட்டணம் 20000 ரூபாய்

மேலதிக விபரங்களுக்கு 0776504765

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...