போருக்கு மத்தியில் காசாவை தாக்கும் பஞ்சம்: ஐ.நா. விடுத்துள்ள எச்சரிக்கை

Date:

இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் காஸா பகுதி பஞ்சத்தை நோக்கிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

காஸாவில் ஒட்டுமொத்த மக்களும் பஞ்சத்தை எதிர்கொள்ளும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

அரைமில்லியனுக்கும் அதிகமானோர் பேரழிவு நிலைமையை சந்தித்துள்ளார்கள். இந்நிலைமை உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் 4 மடங்கு அதிகமாகும்  என உலகளாவிய பட்டினி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தகைய இழப்பு மற்றும் அழிவுடன், கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் காசா மக்களுக்கு மேலும் பசி, நோய் மற்றும் விரக்தியை மட்டுமே கொண்டு வரும் என்று நாம் பல வாரங்களாகக் கூறி வருகிறோம்” என ஐ.நா மனிதாபிமான தலைவர் மார்டின் கிப்பித், எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸ் ஒழிக்கப்படும் வரை காசாவில் போர் நிறுத்தம் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...