மறைந்த குவைத் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மறைவுக்கு ‘நியூஸ்நவ்’ இணையத்தளம் மற்றும் பஹன மீடியாவின் முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். அப்துல் முஜீப் அவர்கள் இன்று கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்திற்கு சென்று அனுதாப பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
இதன்போது, உலக சமாதானத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் முன்னின்று உழைக்கும் வகையில் குவைத்தை வழிநடத்திய பெருந்தலைவரான ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்ததோடு தூதரக அதிகாரிகளிடம் தமது சார்பான அனுதாபத்தையும் பகிர்ந்துகொண்டார்.
குவைத் ஆட்சியாளரின் இழப்பானது அரபுநாடுகளுக்கு மட்டுமன்றி உலகெங்கிலும் வாழ்கின்ற ஏழைகள், தேவையுடையவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரும் இழப்பாகும்.
குவைத் அமீர் மறைவையொட்டி கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள அனுதாப பதிவேட்டில் பல்வேறு பிரமுகர்களும் அரசியல் தலைவர்களும் தமது அனுதாபங்களை பதிவுசெய்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.