வெள்ள அபாயம் எச்சரிக்கை!

Date:

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஏனைய மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையில் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணி முறிப்பு குளத்தின் 9 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் வெள்ள அபாயம் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...