அரச உத்தியோகத்தர்களின் விடுமுறையை குறைக்க ஆலோசனை!

Date:

அரச உத்தியோகத்தர்களுக்கு தற்போது வழங்கப்படும் விடுமுறையின் எண்ணிக்கையை 45 நாட்களில் இருந்து 25 நாட்களாக குறைப்பது தொடர்பான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த நோக்கத்துக்காக, வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு நிறுவன விதிகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகளை ஓய்வூதியங்களுக்கான பணிப்பாளர் நாயகம் ஜகத் டி. டயஸ் முன்வைத்துள்ளார்.

விடுமுறை நாட்களை 10 சாதாரண விடுமுறை நாட்களாகவும், 15 ஓய்வு விடுமுறை நாட்களாகவும் மாற்றுவதற்கும் இதனூடாக முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, ஓய்வூதியச் செலவு அரச செலவினத்தில் 11.4 சதவீதம் என சுட்டிக்காட்டியுள்ள ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம், செலவினங்களை நிர்வகிப்பதற்கு முழு அரச துறையினரும் பங்களிக்க வேண்டுமென குறித்த துறைசார் கண்காணிப்புக் குழுவின் முன்னிலையில் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு 45 முன்மொழிவுகளை ஓய்வூதியத்துக்கான பணிப்பாளர் நாயகம் சமர்ப்பித்துள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் ஓய்வுபெற்ற சமூகத்தின் நலனுக்காக எதிர்பார்க்கப்படும் நிவாரணங்கள் தொடர்பான ஆலோசனைகளையும் ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகம் ஜகத் டி.டயஸ் முன்வைத்துள்ளார்.

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...