அரச நிறுவனங்களின் போனஸ் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு

Date:

இலங்கையிலுள்ள வர்த்தக கூட்டுத்தாபனங்கள், சட்டப்பூர்வ சபைகள் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கான போனஸ் வழங்கும் செயல்முறை தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

2022 இல் நிறுவனத்தின் நிதிச் செயற்பாட்டின் அடிப்படையில் போனஸ் கொடுப்பனவுகளுக்கு அரச ஊழியர்கள் தகுதி பெறுவார்கள்.

தகுதி பெற, ஒரு நிறுவனம் பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும், 2022 நிதியாண்டில் இலாபம் ஈட்டிருக்க வேண்டும்

வரிக்குப் பிந்தைய இலாபத்தில் குறைந்தபட்சம் 30% ஒருங்கிணைந்த நிதியாக அரசாங்கத்தின் மத்திய திறைசேரிக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

இந்தத் தேவைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்யத் தவறிய அரச நிறுவனங்கள் இலாபப் பகிர்வு போனஸுக்குத் தகுதி பெறாது, என்றார்.

இவற்றுக்கு மேலதிகமாக 2022 நிதியாண்டில் நஷ்டம் ஏற்பட்ட எந்தவொரு அரச நிறுவனமும் செயல்முறையிலிருந்து விலக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

செப்டம்பர் 17-19 திகதிகளில் இந்தோனேசியாவில் நடைபெறும் மதங்களுக்கிடையிலான கருத்தரங்கு!

அஷ்ஷைக்.எஸ்.எச்.எம். பளீல் இந்தோனேசியாவில் இருந்து... "மத சுதந்திரமும் ஆசியாவில் மத சிறுபான்மையினது உரிமைகளும்"...

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள் பதிவு.

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 300 கொலைச் சம்பவங்கள்...

காஸா மீதான போரை நிறுத்தக்கோரி நாளை சென்னையில் மாபெரும் பேரணி

கடந்த இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் காட்டுமிராண்டித்தனமான இனச்...

மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்து முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து மின்சார சபை தொழிற்சங்கங்கள்...