மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த“MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியானது நேற்று (05) 08.30 மணிக்கு வட அகலாங்கு 15.20 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 80.30 E இற்கும் அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து வடக்காக ஏறத்தாழ 615 கிலோமீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது.
இத் தொகுதியானது வடக்குத் திசையில் நகர்ந்து நேற்று 02.30 மணியளவில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே,“MICHAUNG” (மிக்ஜம்) என்ற பாரிய சூறாவளியால் நாடு முழுவதும் ஏற்பட்ட தாக்கம் படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.