இலங்கைக்கு 48 மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் முதலாவது மீளாய்வு நடவடிக்கைகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இன்று கூடவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நிதியத்தின் நிர்வாகக்குழுவின் கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, செயல்திறன் அளவுகோல்களை கடைபிடிப்பதில் இருந்து விலக்குகள் மற்றும் மாற்றங்கள், நிதிநிலை அறிக்கைகளின் மதிப்பாய்வு, திருத்தம் மற்றும் அணுகல் ஆகியவை பரிசீலிக்கப்படவுள்ளது.
இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்ததன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் படி சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொண்டிருந்தது.
இதற்கமைய, முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க கடனுதவி முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்டது.
அத்துடன், இரண்டாவது தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிப்பது குறித்து இன்றைய தினம் செயற்குழு தீர்மானம் மேற்கொள்ளவுள்ளது.
இதேவேளை, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் கடன் வழங்குநர்கள் ஒன்றுகூடி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.