இலங்கையில் சர்வதேச வாகன சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கான சேவை

Date:

இலங்கையில் சர்வதேச வாகன சாரதி International Driving Permit (IDP) அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்காக தற்போது நாளாந்தம் சுமார் 150ற்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்து வருவதாக இலங்கை ஓட்டோ மொபைல் சங்கத்தின் Automobile Association of Ceylon தலைவர் தம்மிக ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

சர்வதேச வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு இலங்கை ஓட்டோ மொபைல் சங்கமே அங்கீகாரம் பெற்றுள்ளது. அனுமதிப்பத்திரத்திற்காக சங்கம் 12 ஆயிரத்து 600 ரூபாவை அறவிடுகின்றது.

லங்கா ஓட்டோ மொபைல் சங்கம் வழங்கும் இந்த வாகன சாரதி அனுமதிப்பத்திரம் உலகில் 160 நாடுகளில் செல்லுபடியானது என்று அதன் பொது முகாமையாளர் தேவப்பிரிய ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு 03, காலிமுகத்திடலுக்கு அருகாமையில் மொஹொம்மட் மாக்கான் மாக்கார் மாவத்தை இலக்கம் 40ல் உள்ள இலங்கை ஓட்டோ மொபைல் தலைமையகம் 40 Sir Mohomad Macan Markar Mawatha, Colombo 00300 அமைந்துள்ளது.

24 மணித்தியாலமும் இந்தச் சங்கத்தின் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும்.
94 11 7 555 557 • +94 7 22 755 557 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகத் தொடர்பு கொண்டு சேவை தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...