இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரி நியமனம்!

Date:

கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ் பீரிஸ் இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிசம்பர் 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இப்பதவியை பொறுப்பேற்கும் முன், மேற்கு பாதுகாப்பு படை  கட்டளைத் தளபதியாக அவர் தனது கடமைகளை ஆற்றியிருந்தார்.

இவர், பாணந்துறை புனித அந்தோனியார் ஆண்கள் பாடசாலை மற்றும் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியை பெற்று 1988 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அவரது இராணுவ சேவையின் போது படிப்படியாக பதவி உயர்வு பெற்று, 2021 ஆண்டு மே மாதம் 07 ஆம் திகதி  மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...