இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் ஒரே நாளில் 100 பேர் பலி!

Date:

காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல்- காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் இரண்டரை மாதங்களுக்கு மேல் நீடித்து கொண்டிருக்கிறது.

இதில் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் இராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.

இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதலில் ஒரே நாளில் 100 பேர் பலியானதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா கூறும்போது, “காசா பகுதி முழுவதும் நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது.

இதில் ஒரே நாளில் சுமார் 100 பலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயம் அடைந்தனர்” என்றார்.

காசாவில் நிவாரண பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இதுகுறித்து ஐ.நா. குழந்தைகள் அமைப்பின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரசல் கூறும்போது, “தெற்கு காசாவுக்கு இடம் பெயர்ந்த குழந்தைகள், அடிப்படை தேவையான தண்ணீர் கூட கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். பாதுகாப்பான தண்ணீர் இல்லாமல் வரும் நாட்களில் பல குழந்தைகள் இறக்க நேரிடும்” என்றார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...