கடந்த அக்டோபர் 7 அன்று, பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர், 80 நாட்களை கடந்து நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பினருக்கு உதவும் நாடுகளையும், அவர்களுக்கு உதவும் அமைப்புகளையும் எதிரியாக கருதும் இஸ்ரேலிய இராணுவ படை (IDF) சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு வெளியேயும் தாக்குதலை நடத்தியது.
இது குறித்து அறிவித்த ஈரான் அரசு, “டமாஸ்கஸ் புறநகர் பகுதியில் ஜெய்னபியா (Zeinabiyah) மாவட்டத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரானிய புரட்சி படை பிரிவை (Iran’s Revolutionary Guard Corps) சேர்ந்த மூத்த ஆலோசகர் சையத் ராசி முசாவி (Sayyed Razi Mousavi) கொல்லப்பட்டார்.
ஆதிக்க மனப்பான்மை உடைய இஸ்ரேல் நடத்திய இந்த குற்ற செயலுக்கு அந்நாடு தகுந்த தண்டனையை பெறும்” என எச்சரித்துள்ளது.