எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நடத்தப்படும் எந்த தேசிய தேர்தலாக இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பெறும் என விசேட புலனாய்வு அறிக்கை மூலம் ஜனாதிபதியிடம் விரிவான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த ஒன்றரை வருட காலத்திற்குள் தேசிய மக்கள் சக்தியின் பிரபலம் அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமை தொடர்ந்தால், அடுத்து நடைபெறும் தேர்தல்களில் ஏற்படக்கூடிய நிலைமைகள் தொடர்பான விபரமான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டின் கிராமங்களில் இதற்கு முன்னர் ஏனைய பிரதான கட்சிகளுக்கு ஆதரவளித்து வந்த பலர் தற்போது தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாக புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.