கட்டார் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் காசா பகுதியில் உள்ள மக்களுக்கு தனது சொந்த நிதியில் ஒரு மில்லியன் ரியால் பெறுமதியான நிவாரணப் பொருட்களை தனி விமானத்தில் காஸாவுக்கு அனுப்பி உச்ச கட்ட மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு மில்லியன் கட்டார் ரியால்கள் பெறுமதியான இந்த விமானம், கட்டார் அறக்கட்டளையின் கீழ் ‘கடினத்தன்மையை நீக்கும்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
அதற்கமைய குறித்த விமானத்தில் சுமார் 70 டன் நிவாரண உதவி பொருட்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன.
இதேவேளை கத்தார் தொண்டு முயற்சியின் ஒரு பகுதியாக, காசா பகுதியில் கடினமான மனிதாபிமான நிலைமைகளை எதிர்கொள்ளும் பலஸ்தீனியர்களுக்கு நிவாரணம் வழங்க கத்தார் 10 விமானங்களை அனுப்ப தயாராகி வருகிறது.