கல்வி அமைச்சரின் கூற்று முற்றிலும் பொய்: ஜோசப் ஸ்டாலின்

Date:

தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பது குழந்தைகளுக்கான அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தக்கூடும் என கல்வி அமைச்சர் நேற்று கூறியது முற்றிலும் தவறானது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,

கல்விக்கான வரவு செலவு திட்டம் இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், பாடசாலை செலவுகளை பெற்றோர்கள் ஏற்க வேண்டியுள்ளது, மேலும் பல்வேறு தேவைகளுக்காக தினமும் பாடசாலைக்கு பணம் அனுப்ப வேண்டியுள்ளது என தெரிவித்தார்.

எனவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து கல்வித்துறைக்கு 6 சதவீத நிதியை அரசு ஒதுக்க வேண்டும், ஆனால் அந்த ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

அண்மைய வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் மூலம் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு எவ்வித தீர்வும் வழங்கப்படாவிட்டாலும், அவர்கள் மீது பாரிய சுமை சுமத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் வழங்குவது வழமை போன்று ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளுக்கான தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை.

கல்வித்துறையில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசிடமிருந்து 46 பில்லியன் ரூபாவை கல்வியமைச்சர் கோரியதாகவும் அவர் தெரிவித்தார்.

“தற்போதைய வரவு -செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம், கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எதுவும் இல்லை. பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள், பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்குவதைக் கல்வி அமைச்சர் எப்போதும் குறிப்பிடுகிறார். இந்த நடைமுறை எப்போதும் இருந்தது. அவர் செய்து வருகிறார். இந்த வசதிகளை வழங்குவதைத் தவிர வேறு எதுவும் இல்லை,” என்றார்.

பாடசாலை சீருடைகளுக்கு 6,000 பில்லியன் ரூபா அரசு ஒதுக்கீடு செய்தது, அனைத்து பாடசாலை சீருடைகளும் சீன அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. 6,000 பில்லியன் ரூபா பயன்படுத்தப்படவில்லை என ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...