களனிப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் எதிர்வரும் 11ஆம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் இதன்போது திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அனைத்து மாணவர்களும் குறித்த தினத்திற்கு சமூகமளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் இரவு உறங்கிக் கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் காரணமாக, கடந்த 5ஆம் திகதி பல்கலைக்கழகம் மூடப்பட்டது.