காசாவில் 2ஆவது மனிதாபிமான போர் நிறுத்தம்?: எகிப்து செல்லும் ஹமாஸ் தலைவர்!

Date:

காசாவில் 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அமைப்பின் சிரேஷ்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று எகிப்துக்கு செல்கிறார்.

இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற இஸ்ரேல் பணயக் கைதிகளை மீட்பதற்காக காசாவில் 7 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதில் 90-க்கும் மேற்பட்ட பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் இருந்து பலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். போர் நிறுத்தத்துக்கு பிறகு இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிடம் இன்னும் 129 பணயக் கைதிகள் உள்ள நிலையில் காசாவில் மீண்டும் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வருகிறது.

காசாவில் இருந்து மேலும் கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக 2-வது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக் தெரிவித்தார்.

இந்த நிலையில் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியே இன்று எகிப்துக்கு செல்கிறார்.

இதற்கிடையே ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்தத்திற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா முட்டுக்கட்டை போடுவதால் நிறைவேற முடியாத நிலையில் இருந்து வருகிறது.

Popular

More like this
Related

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...

பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக மழையற்ற வானிலை

இன்றையதினம் (04) நாட்டின் சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை...