காசா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் தீவிரம்: மீண்டும் இணைய சேவை முடக்கம்!

Date:

காசாவில் இணைய சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், காசாவின் அரசாங்க ஊடக அலுவலக தகவல் தொடர்பு முடக்கப்பட்டதால் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை அடைவது கடினமாக இருக்கும்  என்று தெரிவித்தது.

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 3-வது மாதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இதில் குழந்தைகள், பெண்கள் என அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். காசாவில் பலி எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

காசா முனை முழுவதும் இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. வடக்கு, மத்திய, தெற்கு காசா என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது.

நேற்று இரவு கான் யூனிஸ் நகரில் குண்டுகள் வீசப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 179 பேர் பலியாகி உள்ளதாகவும்,300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கான் யூனிஸ் நகரில் ஹமாஸ் அமைப்பினர்- இஸ்ரேல் ராணுவம் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் வைத்தியசாலையில் இஸ்ரேல் ராணுவம் சோதனை நடத்தி வருவதால் அங்குள்ள நோயாளிகள், பொதுமக்கள், டாக்டர்கள் தவித்து வருகிறார்கள் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் காசாவில் மீண்டும் இணைய தள சேவை முடக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலஸ்தீனிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறும்போது, காசாவில் இணைய சேவை மீண்டும் துண்டிக்கப்பட்டு உள்ளன. காசா முழுவதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், காசாவின் அரசாங்க ஊடக அலுவலக தகவல் தொடர்பு முடக்கப்பட்டதால் பலியானவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை அடைவது கடினமாக இருக்கும் என்ற இருக்கும் என்று தெரிவித்தது. இணைய சேவை மற்றும் தகவல் தொடர்பு முடக்கம் காரணமாக காசாவில் மீட்புப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே உணவு, தண்ணீர், மருந்து தட்டுப்பட்டால் தவிக்கும் மக்கள் தற்போது உரிய மீட்பு நடவடிக்கையும் கிடைக்காத சூழலில் உள்ளனர்.

இந்த நிலையில் காசாவில் பொதுமக்கள் பலியாவது அதிகரித்து வரும் நிலையில் தாக்குதலை குறைக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...