காஸா நிலைமையால் முஸ்லிம் சமூகம் மன வேதனையில்: பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை!

Date:

பாகிஸ்தானில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை அந்நாட்டின் இடைக்கால பிரதமர் அன்வர்-உல்-ஹக் கக்கரே வெளியிட்டுள்ளார்.

காஸாவில் நிலவும் போர் சூழ்நிலையில் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ரெிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மக்கள் அனைவரும் பலஸ்தீனத்தின் மோசமான சூழ்நிலையை மனதில் கொள்ள வேண்டும். இது காஸாவில் உள்ள நமது பலஸ்தீன சகோதர சகோதரிகளுக்கான ஒற்றுமையைக் காட்ட வேண்டிய சந்தர்ப்பம்.

புத்தாண்டுக்கான எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு அரசாங்கம் கடுமையான தடையை விதித்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இராணுவ தாக்குதல்கள் காரணமாக காஸாவில் இதுவரை 21 ஆயிரம் பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலில் 9 ஆயிரம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

காஸா மற்றும் மேற்குக் கரையில் நிராயுதபாணியான பலஸ்தீனியர்கள் மற்றும் அப்பாவி குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாகிஸ்தான் உட்பட முழு முஸ்லிம் சமூகமும் மன வேதனையில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் பாகிஸ்தானில் பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் அதிக ஆரவாரத்துடன் நடப்பதில்லை.

இஸ்லாமிய குழுக்களின் எதிர்ப்புகளின் பின்னணியில் புத்தாண்டு கொண்டாடங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...