க.பொ.த.சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: முதன்முறையாக பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியீடு!

Date:

இலங்கை பல்கலைக்கழகங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (01) வெளியிடப்பட உள்ளன.

இதற்கான வெட்டுப்புள்ளிகள் இன்று அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரலாற்றில் முதன்முறையாக பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் மிகக் குறுகிய காலத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை பரீட்­சைகள் திணைக்களத்தினால் குறித்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டன.

இதன்படி, பரீட்­சை பெறு­பே­றுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் 10 நாட்களுக்கு நடத்தப்பட்டது.3,568 பரீட்சை நிலையங்களில் குறித்த பரீட்சை நடத்தப்பட்டது.இதற்கமைய, 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.

இதில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

இதனிடையே, பரீட்சை பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...