சபாநாயகர் தலைமையில் இலங்கை – இந்திய நட்புறவை வலுப்படுத்த புதுடில்லியில் முக்கிய சந்திப்புகள்!

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கையில் இருந்து பாராளுமன்றக் குழுவொன்று கடந்த டிசம்பர் 16ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்தது.

தூதுக்குழுவில் சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பல்வேறு அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் உட்பட அதிகாரிகள் உள்ளடங்கியிருந்தனர்.

புது டில்லியில் புதிய பாராளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்ட பிறகு, இந்தியாவுக்கு சென்ற முதல் ‘வெளிநாட்டு பாராளுமன்றக் குழு’ இதுவாகும்.

இலங்கை தூதுக் குழுவினர் 18ஆம் திகதி துணைத் தலைவர் ஸ்ரீ ஜக்தீப் தங்கரை சந்தித்தனர். அதே நாளில் அவர்களை மக்களவையின் சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லாவையும் சந்தித்தனர்.

இலங்கை தூதுக் குழுவை கௌரவிக்கும் வகையில் சபாநாயகர் அவர்களை கௌவுரவிக்கும் வகையில் மக்களவையின் சபாநாயகர் ஸ்ரீ ஓம் பிர்லா மதிய விருந்து அளித்தார்.

இலங்கைத் தூதுக்குழு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தது.

இந்த சந்திப்பின் போது இருநாட்டு பாராளுமன்ற, சமூக, கலாசார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தின் இரு அவைகளின் நிகழ்வுகளையும் இலங்கை தூதுக்குழு நேரில் பார்த்தனர். அத்துடன் பாராளுமன்றத்தில் உள்ள சிறப்பம்சங்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...