சமூக ஊடகங்களில் தனது குரலைப்போன்று போலியான குரலைப் பதிவு செய்து தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் குரல் பதிவை பதிவு செய்தவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் பொருட்டு பிரபல குழந்தைகள் நல சிகிச்சை நிபுணர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா அவர்கள் இன்று சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது தனக்கு ஏற்பட்ட அபகீர்த்திக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த சட்டத்தரணி பைஸ் முஸ்தபா அவர்கள்,
சமூக ஊடகங்கள் மூலமாக அமைதியான முறையில் சமூகத்திற்காக பணியாற்றுகின்ற சமூகத்தலைவர்களை அவமானப்படுத்துவபவர்களுக்கு எதிராகவும் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக அதற்காக தன்னுடைய முழுமையாக பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
சாய்ந்தமருது மத்ரஸா மாணவனின் மரணத்தை தொடர்ந்து இலங்கையிலுள்ள அரபுக்கல்லூரிகள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் கருத்தாடல்களும் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில் டாக்டர் ரயீஸ் முஸ்தபா அவர்கள் மத்ரஸாக்கள், ஆலிம்கள் தொடர்பில் தவறான தகவல்களை கூறியதாக சமூக ஊடகங்களில் பரலாக செய்திகள் பகிரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.