சமையல் எரிவாயுவின் விலையை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டியிருக்கும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வாரங்களில் 18வீத வரி அதிகரிப்புடன் இந்த விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு லிட்ரோ எரிவாயுவின் விலையை உயர்த்துவதில்லை என அண்மையில் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனவரி மாதம் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தயக்கத்துடன் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாகவும் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
Previous article
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கை!
LEAVE A REPLY