சாகரவுக்கு எதிராக புண்ணாக்கு வாளியுடன் போராட்டம் செய்த மக்கள் போராட்ட இயக்கம்!

Date:

நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைவர் சானக பண்டார உள்ளிட்ட குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு எதிராக இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் சாகர காரியவசம் வெளியிட்ட கருத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த குழுவினர் அலுவலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு பாதுகாப்பு பிரிவினர் சந்தர்ப்பம் வழங்காத நிலையில் வீதியிலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்கள் புண்ணாக்கு வாளியொன்றை கொண்டுவந்ததுடன், அதனை வீதியில் வைத்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் இணைய சேவைக்கு தடை

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு...

இடைவிடாது தாக்குதல்கள்: காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேறும் இஸ்ரேலிய டாங்கிகள்

இஸ்ரேலிய டாங்கிகள் காசா நகர மையப் பகுதியை நோக்கி முன்னேற ஆரம்பித்திருப்பதோடு...

வெற்றி சோகமாக மாறிய தருணம்: கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேயின் தந்தை காலமானார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி வீரர் துனித் வெல்லலகேயின் தந்தை சுரங்க...