ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மிகவும் கீழ்தரமான வரவு – செலவுத் திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,
சாதாரண மக்களைப் புறக்கணித்து பெரும் செல்வந்தர்களை போஷிக்கும் வரவு – செலவுத் திட்டம் மூலம் சமூகத்தில் எந்தத் தரப்புக்கும் எந்த நன்மையும் கிட்டவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் மூலம் இன்னும் 8 தவணைகளைப் பெற வேண்டும். எனவே, இரண்டாம் தவணை கிடைத்தமைக்காக ஆரவாரப்பட்டு கொண்டாடக் கூடாது.
ஊழலை எதிர்க்கும், ஊழலை இல்லாதொழிக்கும் மற்றும் நல்லாட்சிக்காக தயாராகும் எந்தவொரு நபருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் கதவுகள் திறந்தே இருக்கும் என்றார்.