மிக்ஜாம் புயல் காரணமாக இந்தியாவில் தமிழகம் முழுவதும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எப்போதும் போல தமிழ் நாட்டிலுள்ள பல பகுதிகளில் காணப்படுகின்ற மனிதாபிமானமும் மனிதநேயமும் மேலோங்குகின்ற சந்தர்ப்பமாகவே வெள்ள நிவாரணப்பணிகள் அமைகின்றன.
இதன்மூலம் தங்களுடைய சமூக நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் மிக அழகான முறையில் எப்போதும் வெளிப்படுத்திக்காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் இந்து, முஸ்லிம் மக்கள் நெருக்கமான உறவினையும் அடையாளங்களையும் இதனூடாக தெளிவாக காணக்கூடியதாக உள்ளது.
அதற்கமைய தமிழ்நாட்டில் ஒரு அரசியல் அமைப்பாகவும் சமூக சேவை அமைப்பாகவும் செயற்படுகின்ற மனித நேய ஜனநாயக் கட்சி முன்னெடுத்து வரும் வெள்ளி நிவாரணப்பணிகள் பாராட்டுக்குறியது.
அதற்கமைய தமிழகத்தில் மழை பாதிப்பின் தாக்கம் தொடரும் நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் நான்காவது நாளான இன்று நிவாரண பணிகள் தொடர்கிறது.

அதேநேரம் அப்பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இப்பகுதியில் 1000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கு மஜக-வினர் மதிய உணவுகளையும், குடிநீர் போத்தல்களையும் வழங்கினர்.