கொத்மலை – பியகம மின் விநியோக கட்டமைப்பிற்கு மின்னல் தாக்கியமையே, நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டமைக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று மாலை 5.15 அளவில் திடீர் மின் துண்டிப்பு ஏற்பட்டு, இரவு 11.30 அளவிலேயே மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியது.
இந்த சம்பவம் தொடர்பில் மின்சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை இருவேறு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்துள்ளார்.