தேசிய மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் புத்தளம் மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள்!

Date:

அகில இலங்கை ஷொடோகன் கராத்தே சம்மேளனத்தின் 22 வது வருட நிறைவையொட்டி நடாத்தப்பட்ட தேசிய மட்ட கராத்தே சுற்றுப்போட்டியில் புத்தளம் மாணவர்கள் தங்கப்பதக்கங்களை பெற்று சாதித்துள்ளனர்.

இந்த தேசிய மட்ட போட்டிகள் கொழும்பு சுகதாஸ உள்ளக விளையாட்டரங்கில் (26) நடைபெற்றது.

தேசிய மட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் WASHI SHOTOKAN KARATE DO சங்கத்தின் புத்தளம் கிளையின் மாணவர்களாகிய ஏ.எம்.அஸாம் 21 வயதுக்குட்பட்ட பிரிவிலும், யூ. தாமிர் 14 மற்றும் 15 வயதுக்குட்பட்ட பிரிவிலும் குமித்தே போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.

இவர்களை WSKA சங்கத்தின் பிரதான போதனாசிரியரும், பயிற்றுவிப்பாளருமாகிய சிஹான் எம். பெரோஸ் பயிற்றுவித்திருந்தார்.

 

(எம்.யூ.எம்.சனூன்)

Popular

More like this
Related

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் FOUR A’S ADVERTISING FESTIVAL

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising...

ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு ஒப்பானது இஸ்ரேலின் தாக்குதல்கள்: சபையில் சஜித்

பலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு...

உயர்தர வகுப்புகள் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு...