தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் அந்த சபைக்கு 15 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் தலைவராக டொக்டர் மையா குணசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க இதற்கு முன்னர் தேசிய விளையாட்டு கவுன்சிலுக்கு தலைவராக பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.