கண்டி போகம்பர சிறைச்சாலையை ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கு உள்ளூர் முதலீட்டாளர் ஒருவர் முன்வந்துள்ளதாகவும் போகம்பர சிறைச்சாலையில் வரலாற்றுப் பெறுமதியைப் பாதிக்காத வகையில் இது மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
போகம்பர சிறைச்சாலை வளாகத்தை புனரமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றுள்ளது.